மாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. காலையில், பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் முகக் கவசம் அணிந்து, சானிடைசரில் கைகளை சுத்தம் செய்து, வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து பள்ளிகளிலும் ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம் அமர வைத்தனர்.

இதுபோல், மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் 1,13,687 மாணவ, மாணவிகள் நேற்று பள்ளிக்கு சென்றனர். இதில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Related Stories:

>