இங்கிலாந்துடன் மோதும் இந்திய அணி அறிவிப்பு

மும்பை: இந்தியா வரும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. சென்னையில் நடக்க உள்ள முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி (பிப். 5-9; பிப். 13-17): கோஹ்லி (கேப்டன்),ரோகித், ஷூப்மான் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, ரகானே, பன்ட், சாஹா, ஹர்திக், கேஎல் ராகுல், பூம்ரா, இஷாந்த், சிராஜ், தாகூர், ஆர்.அஷ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல். மாற்று: கே.எஸ்.பரத், அபிமன்யு ஈஸ்வரன், ஷாபாஸ் நதீம், ராகுல் சாஹர்.

வலைப்பயிற்சி பவுலர்கள்: அங்கித் ராஜ்புத், ஆவேஷ் கான், சந்தீப் வாரியர், கே கவுதம், சவுரப் குமார். காயத்தால் அவதிப்படும் ஷமி, ஜடேஜா, விஹாரி இடம் பெறவில்லை. நடராஜன், சைனி, பிரித்வி ஷா ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

Related Stories: