ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: இளம் வீரர்களை செதுக்கிய ராகுல் டிராவிட்டிற்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!!

சென்னை : யு 19 மற்றும் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக இருந்து இந்திய அணியின் Bench Strength-ஐ வலுவாக்கிய ராகுல் டிராவிட் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். இந்திய அணியின் முன்னணி வீரர்கள் காயமடைந்த நிலையில் மாற்று வீரர்கள் பலர் ஜொலிக்க காரணம் ராகுல் டிராவிட் என இந்திய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது.கடந்த 69 ஆண்டுகளுக்குப் பின் பிரிஸ்பேன் மைதானத்தில் மிகப்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்து இந்திய அணி வென்றுள்ளது. தொடர்ந்து 2வது முறையாக பார்டர்-கவாஸ்கர் கோப்பை தக்கவைத்தது. இது தவிர காபா மைதானத்தில் கடந்த 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை எந்த அணியும் வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றை இந்திய அணி மாற்றியுள்ளது.

இதையடுத்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்தியா உச்சிமுகுர்ந்த நிலையில் ட்விட்டரில் அதிகப்படியான ஹேஷ்டேக்குகளில் இந்திய அணி டிரெண்ட் ஆகி வருகிறது. இந்திய அணி வெற்றி பெற்ற நிகழ்வு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. அதிலும் நான்காவது போட்டியில் விளையாடிய பெரும்பாலானவர்கள் இளம் இந்திய வீரர்கள் ஆவர். அவர்களை வைத்து இந்திய அணி, அதுவும் ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வெற்றி பெற்று இருப்பது வரலாற்று சாதனை என பலரும் புகழ்ந்து வருகின்றனர். விராட் கோஹ்லி, ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. வீரர்கள் அடுத்தடுத்து காயங்களால் வெளியேறினர். இருப்பினும் இந்திய அணி மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது. வரலாறு படைக்கப்பட்டது. என்ன ஒரு டீம், என்ன ஒரு டெஸ்ட் தொடர், இந்திய அணி விளையாடிய விதம் நம்ப முடியாதது. ரஹானேவின் சிறந்த தலைமை. அனைத்து இளம் இந்திய வீரர்களும் சிறப்பாக விளையாடினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

ராகுல் டிராவிட்டிற்கு ட்விட்டரில் வாழ்த்து மழை

இளம் வீரர்களை செதுக்கிய ராகுல் டிராவிட்டிற்கு ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.  என்சிஏ தலைவராக செயல்பட்டு வருகிறார் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட். கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அன்டர் 19 மற்றும் இந்திய ஏ அணிகளுக்கான தலைமை கோச்சாக செயல்பட்டு இளம் வீரர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை அவர் வழங்கியுள்ளார். முன்னாள் வீரர்களுக்கு வேண்டுகோள் முன்னாள் வீரர்களுக்கு வேண்டுகோள் தற்போது என்சிஏ தலைவராக பணியாற்றிவரும் டிராவிட் தொடர்ந்து பல்வேறு விதங்களில் வீரர்களை ஊக்குவித்து வருகிறார்.இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு காரணமான இளம் வீரர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்கிய ராகுல் ட்ராவிடை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும்  டுவிட்டரில் #INDvsAUS, #Siraj, #IncredibleIndia, #YoungIndia, #ProudMoment, #BCCI, #brisbanetest, #pujara, #Shubmangill, #TestofChampions, #testmatch, #BleedBlue, #IndiaB, #IndiaIndia என பல ஹேஷ்டாக்குகளில் இந்திய அணியின் வெற்றியை டுவிட்டர் தளவாசிகள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஷ்டாக்குகள் அனைத்தும் டுவிட்டர் இந்தியாவில் டாப் 20-ல் டிரெண்ட் ஆகின.

Related Stories:

>