×

விருதுநகர் நகராட்சி மின்மயானம் பழுதால் திறந்த வெளியில் எரிக்கப்படும் சடலங்கள்-இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

விருதுநகர் :  விருதுநகர் புல்லாலக்கோட்டை ரோட்டிலுள்ள நகராட்சி மயானம் கடந்த 9 ஆண்டுகளாக மின் மயானமாக செயல்படுகிறது. மாதம் தோறும் 100 சடலங்கள் வரை இங்கு எரியூட்டப்படுகின்றன. தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இந்த மயானத்தில் ஒரு சடலத்தை எரியூட்ட ரசீது மூலம் ரூ.2ஆயிரம், ரசீது இல்லாமல் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

வசூல் வேட்டைகள் அதிகம் இருந்தாலும் மயானத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்நிலையில் மின்மயான புகைபோக்கி இரு மாதத்திற்கு முன் மூன்றாக ஒடிந்து விழுந்ததால் மின்மயானத்தில் சடலங்களை எரிப்பது நிறுத்தப்பட்டது.

இதனால் ரூ.4 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொண்டு மாயத்திற்கு வெளியே கொட்டகையில் சடலங்களை எரிக்கின்றனர். இதனால் துர்நாற்ற புகையால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மின்மயானத்தில் எரிக்காமல் கொட்டகையில் எரிப்பதால் சடலங்களை எரித்தற்கான மயான ரசீது வழங்குவதில்லை.

இந்த நிலையில் இறந்த ஒருவரின் இறப்பு சான்றிதழ் நகராட்சியில் வாங்க குடும்பத்தினர் நகராட்சிக்கு டாக்டர் சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்று கேட்டு சென்றால், டாக்டர்கள் மயான ரசீது கேட்கின்றனர். மின்மயானம் இயங்காதால் மயான ரசீது வழங்குவதில்லை, அதையும் மீறி ரசீது வழங்க ஏற்கனவே பெற்ற ரூ.4ஆயிரத்தை தவிர்த்து கூடுதலாக ரூ.2ஆயிரம் கேட்பதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.

நகராட்சி நிர்வாகம் மயான பராமரிப்பை அரசு வழிகாட்டுதல்படி  அறக்கட்டளை வசம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் தற்போது தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து இருப்பதால் லாப நோக்கில் செயல்படுத்தி வருகின்றனர்.  எனவே, நகராட்சி நிர்வாகம் தலையிட்டு மின்மயானத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து சேவை நோக்கில் செயல்படும் அறக்கட்டளை வசம் ஒப்படைத்து மயான வளாகத்தில் பூங்கா, கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி, அஸ்தி கலச பராமரிப்பு மையம், காலியிட பராமரிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Virudhunagar Municipal , Virudhunagar: The Municipal Cemetery on Virudhunagar Bullalakottai Road has been functioning as an electric cemetery for the last 9 years. 100 per month
× RELATED சிறுதானிய புட்டுகள், காய்கறி தோசைகள்...