×

கொடைக்கானல் மலையில் தொடர்மழை வெள்ளைப்பூண்டு விவசாயம் நாசம்-நிவாரணம் வழங்க கோரிக்கை

கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக பல நூறு ஏக்கர் விவசாய விளைபொருட்கள் நாசமாகியுள்ளது. இதற்கு நிவாரணம் வழங்க ேவண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் வெள்ளைப்பூண்டு முக்கிய விவசாயமாக உள்ளது. இது 120 நாட்களில் மகசூலுக்கு வரும்.

தற்போது பெய்த தொடர்மழையால்  வெள்ளைப் பூண்டு விவசாயம் மிகுந்த சேதமடைந்துள்ளது. ஆண்டுதோறும் இரண்டு போகமாக வெள்ளைப் பூண்டு விவசாயம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இந்த தொடர்மழை காரணமாக வெள்ளைப்பூண்டு விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 500 முதல் 1000 ஏக்கர் வரை வெள்ளைப்பூண்டு விவசாயத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக வெள்ளைப் பூண்டில் மஞ்சள் நோய் தாக்கியுள்ளது. கருகல் நோயும் தாக்கியுள்ளது. இந்த நோய் காரணமாக மகசூல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே, அரசு உரிய இழப்பீட்டைவழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல கொடைக்கானலில் மலைப்பகுதிகளில் வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த குளிர் சீசன் காலங்களில் பட்டாணி பயிர் செய்வது வழக்கம்.

ஆனால், தொடர்மழை பெய்த காரணத்தினால் மகசூல் இல்லாமல் போனது. அத்துடன் தொடர்மழை காரணமாக நோய் தாக்கி மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாணி பயிர் செய்த விவசாயிகள் பெரிய நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். பயிர் செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் வருவாய்த்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறப்பு முகாம்கள் நடத்தி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

Tags : hills ,Kodaikanal ,Garlic , Kodaikanal: Hundreds of acres of agricultural produce have been destroyed due to continuous rains in the Kodaikanal hills. For this
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை...