×

அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு..!!

மதுரை: அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் 2ம் அலையானது உலகம் முழுவதும் வேகமாக பரவி உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி கூட்டங்கள், நிகழ்வுகள், பேரணிகள், பிரச்சாரங்கள் நிகழ்ந்து வருகிறது. ஆதனால் கொரோனா வைரஸின் 2ம் அலை பரவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அதனை தடுக்கும் விதமாக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பிரச்சாரங்கள், கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அச்சமயம், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அரசியல் கட்சிகளின் பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவை உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற்று வருகிறது. ஆதனால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றிற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.


Tags : branch ,Madurai ,parties ,campaigns ,High Court ,meetings , Political Party, Campaign, Rally, Public Meeting, Barrier, Icord Branch
× RELATED குற்றால அருவிக்கு வரும்...