விடுதலையை எதிர்பார்க்கும் பேரறிவாளனின் 30 ஆண்டுகால காத்திருப்பு நாளை முடிவுக்கு வருமா? சுப்ரீம் கோர்ட்டில் நாளை இறுதி விசாரணை

டெல்லி: புத்தாண்டு பரிசாக பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவாரா என்று தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. பேரறிவாளன் வழக்கில் இறுதி விசாரணை நாளை நடைபெற உள்ள நிலையில் அவர் விடுதலை ஆவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நாளை இறுதி விசாரணை நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் கடந்த நவம்பரில் மனு தாக்கல் செய்தார். அரசியல் சட்ட பிரிவு 161-ன் படி பேரறிவாளன் விடுதலை பற்றி, மாநில அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியது. பேரறிவாளன் விடுதலை குறித்து மாநில அரசோ, ஆளுநரோ முடிவு செய்ய முடியாது என மத்திய அரசு திடீரென வாதம் செய்துள்ளது.

மத்திய அரசின் வாதத்துக்கு தமிழக வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் எந்த பதிலும் கூறவில்லை என கூறப்படுகிறது. தற்போதாவது மத்திய அரசின் வாதத்துக்கு தக்க பதிலடியை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தருமா என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை கோரும் பேரறிவாளன் மனுவை மாநில அரசு பரிசீலிக்கலாம் என்று ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக இருந்த போதே சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியது. பேரறிவாளனை விடுதலை செய்ய மாநில அரசுக்கு உள்ள உரிமையை அதிமுக அரசு நீதிமன்றத்தில் நிலை நாட்டுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு 2018, செப். 19-ம் தேதியே பரிந்துரைத்து விட்டதாக மாநில அரசு தெரிவித்தது.

பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்பதே தமிழக கட்சியின் நிலைபாடு ஆகும். ராஜீவ் கொலை குறித்த பல்நோக்கு கண்காணிப்புக் குழு அறிக்கையை ஆளுநர் காரணம் காட்டியதும் நிராகரிக்கப்பட்டது. பல்நோக்கு விசாரணை குழு பேரறிவாளன் விடுதலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்திருந்தது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ளும் நிலையை மாநில அரசு நீதிமன்றத்தில் நிராகரிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது. மாநில அரசு தன் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் வாதங்களை முன்வைக்குமா? எனவும், விடுதலையை எதிர்பார்க்கும் பேரறிவாளனின் 30 ஆண்டுகால காத்திருப்பு நாளை முடிவுக்கு வருமா? என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories:

>