×

55 நாட்களாக தொடரும் போராட்டம்: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் 2024-ம் ஆண்டு தேர்தல் வரை போராட்டம் நீடிக்கும் என விவசாய அமைப்பினர் திட்டவட்டம்

டெல்லி : 55 நாட்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாயிகள் அமைப்பினருடன் நாளை 10ம் கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஈடுபட உள்ளது. இந்த நிலையில் வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது. புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கக் கோரியும் டெல்லி எல்லைகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

55 நாட்களாக தொடர்ந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு தரப்பில் நடத்தப்பட்ட 9 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளன. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.விவசாயிகள் குடியரசு தினத்தன்று நடத்த உள்ள  ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. விவசாயிகளுடன் திங்களன்று நடைபெற இருந்த 10ம் கட்ட பேச்சுவார்த்தையும் மத்திய அரசு நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை பரிசீலினை செய்து 2 மாதங்களில் அறிக்கை அளிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு குழு இன்று முதன்முறையாக டெல்லியில் கூடி விவாதிக்க உள்ளது.  

இதனிடையே பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் டிக்கைட் நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் விவசாயிகள் எவ்வளவு காலம் இப்படி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கேட்கப்பட்டதற்கு, நாங்கள் 2024 மே மாதம் வரை கூட போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளோம். எங்கள் கோரிக்கை மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். குறைந்த பட்ச ஆதார விலை உறுதி செய்யப்பட வேண்டும். 2024ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வரையிலும் போராடுவோம், என்றார்.



Tags : struggle ,organization ,elections , Federal Government, Negotiations
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் நிலவும்...