×

ஒவ்வாமை உள்ளவர்கள் கோவாக்சினை தவிர்த்திடுக : 3 நாட்களுக்கு பிறகு கோவாக்சின் போடக் கூடாதவர்களின் பட்டியலை வெளியிட்டது பாரத் பயோடெக்

ஹைதரபாத் : ஒவ்வாமை, காய்ச்சல் உள்ளவர்கள் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், தனது இணையதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வாமை, காய்ச்சல், ரத்தக்கசிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாய்மை அடைந்த பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்களும் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி கோவிஷீல்டு மருந்துடன் சேர்ந்து கோவாக்சின் தடுப்பூசி மருந்தும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 3 நாட்களுக்கு பிறகு கோவாக்சின் போடுவதை தவிர்க்க வேண்டியவர்களின் பட்டியலை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் இறுதிக்கட்ட சோதனை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், அதனை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Bharat Biotech , Allergy, Covaxin, Bharat Biotech
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை