பெரியபாளையம் அருகே நடந்த கொள்ளை வழக்கில் வாலிபர் சிக்கினார்

ஊத்துக்கோட்டை: \பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சி நடுகுப்பத்தில் வசித்து வருபவர் தேவராஜ் (42).  இவருக்கு, 2 மகள்கள் உள்ளனர். பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் உறவினர் வீட்டில் இருந்த மகள்களை அழைத்து வர சென்றபோது அப்போது, வீட்டில் தேவராஜின் தாயார் சாரதா (65) தனியாக இருந்தார். அப்போது, வீட்டிற்கு வந்த மர்ம நபர், சாரதாவை கட்டிலில் கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த 10 சவரன்  நகை மற்றும்  40 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். இது குறித்து ஆரணி போலீசார் வழக்கு பதிந்து  மர்ம நபரை தேடி வந்தனர்.  இதனிடையே, நேற்று அதிகாலை ஆரணி பஜாரில், சந்தேகத்தின்பேரில் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவன் முன்னுக்கு பின் முரணாக பதில் கூற, அவனிடம் போலீசார் துருவித்துருவி விசாரித்ததில் மூதாட்டியை கட்டிபோட்டு திருடியதை ஒப்புக்கொண்டான்.  அவன், திருநின்றாவூர் பாக்கம் பகுதியை சேர்ந்த பலராமன் (27)  என்பது தெரிந்தது. மேலும், அவனை கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். பின்னர், அவனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். அதன்பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>