திமுகவின் 11வது மாநில மாநாடு திருச்சியில் நடக்கிறது

திருச்சி: வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுக சார்பில் பிராமாண்ட மாநில மாநாட்டினை நடத்த தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது 11வது தி.மு.க. மாநில மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.  இதற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் 250 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் மாநாட்டின் ஆயத்தப் பணிகளை நேற்று முதன்மை செயலாளர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். 2014ல் திமுக மாநாடு திருச்சியில் பிப்ரவரி மாதம் நடந்தது. இதனால் 2021ல் 11வது மாநில மாநாடும் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறலாம் என்றும், இதுகுறித்த அறிவிப்பை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும்  கே.என்.நேரு கூறினார்.

Related Stories:

>