×

4 மாதத்தில் விஞ்ஞானிகள் சாதனை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மெஷின் பிஸ்டல் ‘அஸ்மி’: விரைவில் ராணுவத்தில் சேர்ப்பு

பெங்களூரு:  இந்தியாவின் முதல்  உள்நாட்டு 9 மிமீ மெஷின் பிஸ்டலை ராணுவ ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது. காலாட்படை பள்ளி மற்றும் டிஆர்டிஓவின் ஆயுத ஆராய்ச்சி  மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனம் (ARDE, புனே ஆகியவை இணைந்து இந்த ஆயுதத்தை  உருவாகியுள்ளது. நான்கே மாதத்தில் இந்த ஆயுதம் உள்நாட்டு தொழில் நுட்பத்தை  பயன்படுத்தி சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. பிஸ்டல் இன்-சர்வீஸ்  9 மிமீ வெடிமருந்துகளை இதில் பயன்படுத்த முடியும்.  விமான தர  அலுமினியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மேல் ரிசீவர் மற்றும் கார்பன் ஃபைபரை  பயன்படுத்தி  உலோக 3D அச்சிடுதல் என்ற நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி  இது தயாராகியுள்ளது.

 ஆயுதப்படை வீரர்கள், தளபதிகள்,  விமானக்  குழுக்கள், ஓட்டுநர்கள், போர் வீரர்கள், சமூக எதிர்ப்பாளர்கள், கிளர்ச்சி  மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பயன்படும் வகையில்  இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பு செலவு  ரூ. 50,000 ரூபாய்  என்பதால்  ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது.  உள்நாட்டு தொழில்  நுட்பத்தில் 100 சதவீதம் இது  உருவாகப்பட்டுள்ளது என்பது சிறப்பு அம்சமாகும். ராணுவத்தில் அஸ்மியை விரைவில் பயன்படுத்துவர் என  எதிர்பார்க்கலாம்.



Tags : Scientists ,machine pistol ,army ,Azmi , Scientists' record in 4 months Home-made machine pistol ‘Azmi’: Soon enlisted in the army
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...