குடியரசு அணிவகுப்பில் ரபேல்

புதுடெல்லி:  வருகிற 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் புதிதாக வாங்கப்பட்ட ரபேல் போர் விமானம் பங்கேற்கிறது. டெல்லியில் வரும் 26ம் தேதி நடக்க உள்ள குடியரசு தின விழா அணி வகுப்பில் முதல் முறையாக ரபேல் போர் விமானம் பங்கேற்க உள்ளது. விழாவில் வெர்டிக்கல் சார்லி எனப்படும் மிககுறைந்த உயரத்தில் விமானங்கள் பறந்து செங்குத்தாக எழுந்து தலைகீழாக சுழலும் சாகசத்தில் ஒரே ஒரு ரபேல் போர் விமானம் பயன்படுத்தப்படுகின்றது. விங் கமாண்டர் இந்திராநில் நந்தி கூறுகையில், ”வெர்டிக்கல் சார்லி சாகசத்தில் ஒரே ஒரு ரபேல் விமானம் பயன்படுத்தப்படுகின்றது. மொத்தம் 38 விமானப்படை விமானங்கள் மற்றும் ராணுவத்தின் 4 விமானங்கள் குடியரசு தின விழா சாகசத்தில் ஈடுபடுகின்றன” என்றார்.

Related Stories: