×

போலி இணையத்தில் பணம் செலுத்த வேண்டாம்: பி.எஸ்.என்.எல் எச்சரிக்கை

சென்னை: போலியான இணையதள முகவரிக்குள் சென்று வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம் என பி.எஸ்.என்.எல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை தொலைத்தொடர்பு வட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சில நபர்கள் பி.எஸ்.என்.எல் பெயரில் www.bsnlbharatfiberdealer.in என்ற போலியான இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் பி.எஸ்.என்.எல் சேவைக்கான கட்டணத்தை இணையதளம் வாயிலாகவே வசூலித்துள்ளனர். பி.எஸ்.என்.எல் அதிகாரப்பூர்வ இணையதளம் குறித்து தெரியாத வாடிக்கையாளர்கள் இதன் மூலம் ஏமாறுகின்றனர்.

எனவே, பொதுமக்கள் இதுபோன்ற போலியான இணையதள முகவரியை கண்டு ஏமாற வேண்டாம். எனவே, பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இதுபோன்ற போலி இணையதளம் குறித்து தெரியவந்தால் உடனடியாக bsnlprchn@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு புகார் அனுப்பலாம். உங்களுடைய புகாரின் பேரில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பி.எஸ்.என்.எல் சென்னை வட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான www.chennai.bsnl.co.in என்ற இணையதளத்திலேயே காண வேண்டும். இல்லை என்றால் www.bsnl.co.in என்ற இணையதள முகவரியையும் காணலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : BSNL , Do not pay on fake internet: BSNL warning
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...