அம்மா மினி கிளினிக் மூலம் சென்னையில் 28 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

சென்னை: அம்மா மினி கிளினிக் மூலம் சென்னையில் 28 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த மாதம் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. சென்னையில் மொத்தம் 200 கிளினிக் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி தற்போது வரை மொத்தம் 55 கிளினிக்குள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 17ம் தேதி மட்டும் 755 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது வரை 28 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>