விமானப்படைக்கு வலு சேர்க்க 29 மிக், 12 சுகாய் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: விமானப்படைக்கு வலுசேர்க்க 29 மிக், 12 சுகாய் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சீனா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய விமானப்படையை வலுவாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக பிரான்சிடமிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட நிலையில், ரூ.48,000 கோடியில் 83 தேஜஸ் விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடமிருந்து 29 மிக் மற்றும் 12 சுகாய் போர் விமானங்களை வாங்கவும் தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே விமானப்படையில் 59 மிக்-29 ரக போர் விமானங்கள் உள்ளன. தற்போது வாங்கப்பட உள்ள 29 மிக் விமானங்கள் முந்தைய விலையை விட குறைவாக வாங்க இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், 272 சுகாய் ரக போர் விமானங்கள் விமானப்படை வசம் உள்ள நிலையில், புதிய 12 விமானங்கள் மற்றும் உதிரி பாகங்கள் ரூ.10,730 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட உள்ளது.

Related Stories:

>