மத நம்பிக்கையை புண்படுத்திய விவகாரம்; மாஜி ஆளுநர் அளித்த புகாரால் நடிகை மீது வழக்கு

கொல்கத்தா: மத நம்பிக்கையை புண்படுத்திய விவகாரம் தொடர்பாக முன்னாள் ஆளுநர் அளித்த புகாரின்படி மேற்குவங்க நடிகை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திரிபுராவை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், மேகாலயாவின் முன்னாள் ஆளுநருமான ததகதா ராய், மேற்குவங்க நடிகை சயோனி கோஷ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘2015ம் ஆண்டில், நடிகை சயோனி கோஷி தனது டுவிட்டர் பக்கத்தில்  மார்பிங் செய்யப்பட்ட ஆணுறையுடன் குறிப்பிட்ட மத கடவுளின் படத்துடன்  பெண்ணும் இருப்பது போல் படத்தை வெளியிட்டார். எய்ட்ஸ் விழிப்புணர்வு  விளம்பர சின்னம் அதில் இருந்தது. இவரது செயலால் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் போல் உள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகாராக இருந்தாலும், தற்போது இவ்விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக ததகதா ராய் தற்போது வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘புண்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 2015ல் மீம்ஸ் போட்டுள்ளீர். இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 295 ஏ இன் கீழ்  நீங்கள் குற்றம் செய்துள்ளீர். இப்போது அதன் விளைவுகளைத் சந்திக்க தயாராக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு சயோனி கோஷ் அளித்த டுவிட்டர் பதில், ‘நீங்கள் கூறும் மீம்ஸ் பதிவு பிப்ரவரி 2015ல் என் பக்கத்திற்கு வந்தது. இந்த மீம்ஸ் விரும்பத்தகாதது. அப்போது எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தது. 2017ம் ஆண்டுக்குப் பிறகுதான் எனது டுவிட்டர் கணக்கைத் திரும்பப் பெற முடிந்தது.

Related Stories:

>