நடிகர் கமல் நன்றாக பேசுவார் அவரை வேடிக்கை பார்க்கலாம்: கே.எஸ்.அழகிரி பேட்டி

புதுச்சேரி: புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தன்னுடைய துறை ரீதியாக நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பேடி அனுமதி வழங்க கோரி கடந்த 10ம் தேதி முதல் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். நேற்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்து கந்தசாமியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடாவடி போக்கால் மக்கள் சிரமப்படுகிறார்கள்.

தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரும். திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு கொள்கை கூட்டணி. எங்கள் கூட்டணியில் மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் என அறிவித்துள்ளோம். ஆனால் அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய முடியாத நிலை உள்ளது. பாஜகவும், பாமகவும் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் மாற்றுக்கருத்தை கூறுகிறார்கள். ஓபிஎஸ் இன்னும் தெளிவாக பேசவில்லை. நடிகர் கமல் நன்றாக பேசுவார். அவரை வேடிக்கை பார்க்கலாம் இவ்வாறு கூறினார்.

Related Stories:

>