உத்தரப் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவமனை பணியாளர் திடீர் நெஞ்சுவலி, மூச்சு திணறலால் உயிரிழப்பு!!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவமனை பணியாளர் ஒருவர் திடீரென மரணம் அடைந்துள்ளார்.உயிரிழந்த அந்த நப முரடாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றி வந்த மகிபால் சிங் ஆவார். 46 வயதான இவருக்கு கடந்த சனிக்கிழமை மதியம் மருத்துவமனையில் வைத்து கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அடுத்த நாள் இரவு பணியை முடித்து சென்ற மகி பாலுக்கு திடீரென நெஞ்சுவலியும் மூச்சு திணறலும் ஏற்பட்டதாக தெரிகிறது.

அதைத் தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபோதும் சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்துவிட்டார். மகிபால் உயிரிழப்பிற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல அல்ல என்று உத்தரப் பிரதேச முதன்மை மருத்துவ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதே நேரம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவ பணியாளர் ஒருவர் 24 மணி நேரத்தில் திடீரென உயிரிழந்து இருப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட 447 பேருக்கு சிறிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>