×

டாப்சிலிப்பில் பனி மூட்டம்: குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி

ஆனைமலை: ஆனைமலை அருகே உள்ள டாப்சிலிப் பகுதியில், தொடர்ந்து பனிமூட்டம் நிலவி வருவதால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடும் குளிரால் அவதிக்குள்ளாகினர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதி பொள்ளாச்சியில் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தங்களது குடும்பங்களுடன்  டாப்ஸ் சிலிப் வந்து இயற்கை அழகை ரசித்து செல்வது வழக்கம்.

இயற்கை எழில் கொஞ்சும் டாப்சிலிப் வனப்பகுதியில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்நிலையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்குள்ள வனத்துறை விடுதிகளில் முன்பதிவு செய்திருந்தனர்.பொங்கல் விடுமுறையை கொண்டாட டாப்சிலிப் வந்த சுற்றுலா பயணிகள் அங்கு நிலவும் பனிப்பொழிவு காரணமாக விடுதியை விட்டு வெளியே வரமுடியாமல் குளிரில் தவித்தனர். வனப்பகுதியை சுற்றி பார்க்க முடி்யாதபடி பனிமூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் இயற்கை வளங்களை காண முடியாமலும், இரவில் நிலவிய கடுங்குளிராலும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.



Tags : Topslip , Snowfall in Topslip: Tourists suffer from cold
× RELATED டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு