×

நகராட்சி அலட்சியத்தால் குளமான தார்ச்சாலைகள் : விருதுநகர் மக்கள் அவதி

விருதுநகர்: விருதுநகர் தலைமை தபால் நிலையம் துவங்கி பேராலி ரோடு வரையிலான நகராட்சியின் ஏஏ சாலை கடந்த மூன்று ஆண்டுகளாக ண்டும், குழியுமாக கிடக்கிறது. ஏஏ சாலையில் நூற்பாலைகள், பருப்பு, எண்ணெய் மில்களும், பேராலி ரோட்டில் பாலி பேக் கம்பெனிகள், நூற்பாலைகள், அட்டை நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. விருதுநகர் ஏஏ ரோடு வழியாக பேராலி ரோடு செல்ல வேண்டும். இந்நிலையில் ஏஏ ரோடு முழுவதும் குளங்கள் வெட்டியது போன்று பள்ளங்களாய் மாறியுள்ளன. அவற்றில் மழைநீரும், பாதளாச்சாக்கடை கழிவுநீரும் கலந்து தேங்கி குளங்களாக காட்சி அளிக்கின்றன. இதனால் சின்ன பேராலி, பெரிய பேராலி கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள், தொழிற்சாலைகளுக்கான கன்டெய்னர் லாரிகள், கனரக வாகனங்கள், கார்கள், டூவீலர்கள் சென்று வருவதில் சிரமங்கள் தொடர்கிறது.

ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் வசிப்போரும், தொழிற்சாலைகளுக்கு வேலைகளுக்கு செல்லும் பணியாளர்களும், பேராலி கிராமமக்கள் பகல், இரவு நேரங்களில் பலரும் பள்ளங்களில்  விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். மேலும் ஏஏ ரோடு குடியிருப்பு பகுதிகளில் தங்கியிருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான வடமாநில இளைஞர்கள் கழிவுநீரில் நடந்த சென்று வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் ஏஏ ரோட்டை முழுமையாக சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Pond Darshalas ,Virudhunagar , By municipal negligence Pond Darshalas : Virudhunagar people suffer
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...