வரும் 21-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: வரும் 21-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். திமுக ஆக்கப் பணிகள் குறித்து ஜனவரி 21 மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என கூறினார். மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக செயலாளர்/பொறுப்பாளர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் 77 பேரும், புதுச்சேரி திமுக பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மற்றும் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பரப்புரை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஸ்டாலின் தற்போது கிராம சபை கூட்டங்கள் நடத்தி வருகிறார். மேலும் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More