அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் நிலவுகிறது: வானிலை மையம்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் நிலவுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுவை, கேரளாவில் இருந்து பருவமழை விடைபெறுகிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவியது என கூறப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழையின் தீவிரம் முற்றிலும் குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>