ஊருக்கு சென்றோர் சென்னை திரும்புவதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னையை நோக்கி நேற்று மாலை அதிக அளவில் திரும்பினர். இதனால், மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஆங்காங்கே காணப்பட்டது. ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான கார்கள் மற்றும் வேன்கள், இருசக்கர வாகனங்கள் சென்னையை நோக்கி படை எடுத்து வருகின்றன. இதனால், சாலையை கடப்பதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் குறுக்காக சாலையினை கடக்கும் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் படாளம், புக்கத்துறை, மாமண்டூர் போன்ற பகுதிகளில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். அந்தந்த பகுதியின் போலீசார் வாகனங்கள் நெரிசல் இன்றி செல்லும் நோக்கில் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் ஒரு மணி நேரத்திற்கு சுமார் பத்து கிலோமீட்டர் வேகத்திலேயே வாகனங்கள் செல்ல கூடிய சூழல் ஏற்பட்டது.

Related Stories:

>