பொங்கல் விடுமுறையால் 3 நாளில் ரூ.589 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தமிழகத்தில் 3 நாளில் தமிழகத்தில் ரூ.589 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. இதில் பொங்கல் விடுமுறை தினமான 3 நாட்களில் மட்டும் ரூ.589.05 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. போகி பண்டிகைக்கு(13ம் தேதி) ரூ.147.75 கோடிக்கும், பொங்கல் பண்டிகைக்கு (14ம் தேதி) ரூ.269.43 கோடிக்கும், காணும் பொங்கல் தினத்தன்று(16ம் தேதி) ரூ.171.87 கோடிக்கும் தமிழகத்தில் மது விற்பனையாகியுள்ளது. காணும் பொங்கல் அன்று சென்னை மண்டலத்தில் ரூ.38.14 கோடி, திருச்சி மண்டலம் ரூ.36.12 கோடி, சேலம் மண்டலம் ரூ.32.85 கோடி, மதுரை மண்டலம் ரூ.34.59 கோடி, கோவை மண்டலம் ரூ.30.17 கோடிக்கும் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

Related Stories: