மாமல்லபுரத்தில் பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள்

சென்னை: டெல்லியில் இருந்து பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் 7 பேர் நேற்று மாலை மாமல்லபுரத்திற்கு வந்தனர். அவர்களை செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம், திருக்கழுக்குன்றம் தாசில்தார் பர்வதம் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர், பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுணன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இங்குள்ள, மூத்த சுற்றுலா வழிகாட்டிகள் மாமல்லபுரத்தின் சிறப்பு மற்றும் சிற்பங்கள் யாரால் உருவாக்கப்பட்டது என்பது குறித்து தெளிவாக எடுத்து கூறினர்.

Related Stories:

>