தமிழகம் முழுவதும் 6,156 பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் 6,156 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. மேலும் நேற்று முன்தினம் சென்னையில் 12 மையங்களில் 1200 பேரில் 310 பேரும், காஞ்சிபுரத்தில் 3 மையங்களில் 32 பேரும், செங்கல்பட்டில் 3 மையங்களில் 55 பேர் மட்டுமே போட்டுள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்படும் நிலையில் கோவிஷீல்டு 3,027 பேருக்கும், கோவேக்சின் 99 பேருக்கும் போடப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அதன்படி சென்னையில் 402 பேருக்கும், செங்கல்பட்டில் 43 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 6 பேர் என மொத்தம் கோவிஷீல்டு 2,847 பேருக்கும், கோவேக்சின் 183 பேருக்கும் என 3030 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் கோவீஸ்சீல்டு 5,874 பேருக்கும், கோவேக்சின் 282 பேருக்கும் போடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் கோவீஸ்சீல்டு, கோவேக்சின் 6,156 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories:

>