சபரிமலையில் 20ம்தேதி நடை அடைப்பு: நாளை இரவு வரை பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த டிசம்பர் மாதம் 30ம்தேதி மாலை திறக்கப்பட்டது. 31ம்தேதி முதல் மகர விளக்கு பூஜைகள் தொடங்கின. கொரோனா பரவல் காரணமாக தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை கடந்த 14ம்தேதி நடந்தது. வழக்கமாக மகர ஜோதியை தரிசிப்பதற்கு சபரிமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். ஆனால், இந்த ஆண்டு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே மகர ஜோதியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், வரும் 20ம்தேி காலை 6.30 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படுகிறது. நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Related Stories:

>