சீனா ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்: பீதியை கிளப்பும் புது தகவல்

பீஜிங்: சீனாவின் வுகான் மாகாணத்தில் தான் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில், முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. அங்கிருந்துதான் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பரவியது. தற்போது, பெரும்பாலான நாடுகளில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் பீஜிங் அருகே தியான்ஜினில் தாகியோடோ புட் கோ. லிமிடெட் என்ற பெயரில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு நியூசிலாந்து, உக்ரைனில் இருந்து பால்பவுடர் உள்ளிட்ட ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் பெறப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆலை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் இருப்பதால் சீனாவில் பீதி நிலவுகிறது.

Related Stories:

>