தமிழக - கர்நாடக எல்லையில் மீண்டும் பெயர் பலகைகள் சேதம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் ராமாபுரம் கிராமம் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான வரவேற்பு பலகைகளை கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கடந்த 10ம் தேதி மாலை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இந்நிலையில் நேற்று தாளவாடி அருகே உள்ள பையனாபுரம் கிராமத்திலிருந்து கர்நாடக மாநிலம் ஒட்டரள்ளி செல்லும் சாலையில் எத்துக்கட்டி வனப்பகுதி அருகே வைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான 2 பெயர் பலகைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பெயர் பலகைகளை சேதப்படுத்தியது யார் என தெரியவில்லை. தகவல் அறிந்த தாளவாடி போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>