இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன தயாரிப்புகளை மதுரை மீனாட்சி அம்மன் உள்பட கோயில்களில் பயன்படுத்த ஒப்பந்தம்

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட இந்தியா முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் அதிக அளவிலான மக்கள் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு வருவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்வதற்கு நாடு முழுவதும் உள்ள முக்கியமான கோயில்களில் 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கோயில் வளாகத்தில் கிருமி நீக்கம் செய்து சுத்தம் செய்வதற்கான இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட புதுமையான சுகாதார தயாரிப்புகளான நேச்சர் புராடெக்ட் என்னும் பெயரில் புதிய தயாரிப்புகளை இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த தயாரிப்புகளை ஆந்திராவில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில், கர்நாடகாவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயில், கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில் மற்றும் தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் ஆகிய கோயில்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்யும்விதமாக நேச்சர் புராடெக்ட் நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுடன் இணைந்துள்ளது. இந்நிறுவன விளம்பர தூதராக நடிகை காஜல் அகர்வால் உள்ளார்.

Related Stories:

>