மது அருந்தும்போது மோதல் பைக்குகள் தீ வைத்து எரிப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பொருமாளேரி கிராமம் உள்ளது. இங்கு, இதே பகுதியை சேர்ந்தவர்களும், பையனூர் கிராமத்தை சேர்ந்த சிலரும் நேற்று முன்தினம் இரவு மது அருந்தி உள்ளனர். அப்போது, போதை தலைக்கு ஏறியதும் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், அடிதடியாக மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். அப்போது, பெருமாளேரியை சேர்ந்த 2 பைக்குகளை, பையனூர் பகுதியை சேர்ந்தவர்கள் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று அனைவரையும் விரட்டி அடித்தனர். மேலும், இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் பையனூரை சேர்ந்த 8 பேரும், பெருமாளேரியை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 14 பேரை கைது செய்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>