பொங்கல் விடுமுறையால் படகு குழாமில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

செய்யூர்: ஆண்டுதோறும் காணும் பொங்கலையொட்டி, அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடற்கரையோரமுள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், செய்யூர் அடுத்த முதலியார்குப்பம் பகுதியில் உள்ள தமிழக அரசின், தமிழ்நாடு சுற்றுலா படகு குழாமில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்காக  திறக்கப்பட்டது.

இதனால், காணும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, இந்த சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து நேற்று ஞாயிறு விடுமுறை காரணமாக இங்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டியது. இங்கு வந்த அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு படகு குழாம் நிர்வாகத்தின் சார்பில், கிருமிநாசினிகள் வழங்கப்பட்டதோடு, சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளியை பின்பற்ற செய்து, பாதுகாப்பான முறையில் ஸ்பீடு போட்டு, வாட்டர் ஸ்கூட்டர், எட்டு பேர் பயணிக்கக்கூடிய படகு மற்றும் மிதி படகுகளில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்தனர்.

Related Stories: