பள்ளிகளில் தூய்மைப்பணி தீவிரம்

காஞ்சிபுரம்: தமிழகத்தில் கொரோனோ பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாகவே தற்போது வரை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி தொடர்ந்து முன் வைக்கப்பட்ட நிலையில் கொரோனா தாக்கம் தற்போது குறைந்த நிலையில் நாளை (19ம் தேதி) முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி திறப்பதற்கு முன்பு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் பெருநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள ராணி அண்ணாதுரை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை சுத்தம் செய்தல், மேசை, நாற்காலி உள்ளிட்டவைகளுக்கு மருந்து தெளித்தல், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் நகராட்சி ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக அரசு அறிவித்த அனைத்து நடைமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என பள்ளி நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>