வீரராகவர் கோயிலில் தீர்த்தவாரி குளத்தில் நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் திருக்கோயிலில் தை மாத பிரமோற்சவம் கடந்த 9ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. 7 ம் நாளில் திருத்தேர் விழாவும் இதனைத் தொடர்ந்து தை பிரமோற்சவத்தின் 9ம் நாளான நேற்று காலையில் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்தி வீரராகவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத் தொடர்ந்து  கோயில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. சக்கரத்தாழ்வார் மற்றும் சின்னபெருமாளும் கோயில் குளத்தில் நீராடினர். வீரராகவப் பெருமாள் கோயில் குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் கோயில் குளத்தில் நீராட அனுமதி மறுக்கப்பட்டது. கோயில் அர்ச்சகர்கள் மட்டும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related Stories:

>