பண்டிகை கொண்டாட கரும்புடன் வந்தவர் மின்சாரம் பாய்ந்து பலி

பூந்தமல்லி: போரூரை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (41), தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன் தினம் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட வீட்டிற்கு கரும்பு வாங்கி வந்தார். அப்போது வீட்டின் மாடி படிக்கட்டுகளில் ஏறும் பொழுது மேலே சென்ற மின்கம்பியில் கரும்பு எதிர்பாரதவிதமாகபட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று இறந்தார்.

Related Stories:

>