×

ஊத்துக்கோட்டை பகுதியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை மற்றும் எல்லாபுரம் ஒன்றியத்தில் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது. அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனிடையே, பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் ஒன்றிய  குழு தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் அம்மினி மகேந்திரன், நிர்வாகி ராஜிவ்காந்தி முன்னிலையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். மேலும் தாராட்சி, பாலவாக்கம், சூளைமேனி, தண்டலம், பெரியபாளையம், வெங்கல் என 53 ஊராட்சிகளிலும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஊத்துக்கோட்டை பேரூர் அதிமுக சார்பில் பேரூர் செயலாளர் ஷேக்தாவுத் தலைமையில் நிர்வாகிகள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.

Tags : MGR ,Birthday Celebration ,Uthukottai , MGR Birthday Celebration at Uthukottai
× RELATED புழல், எம்ஜிஆர் நகர் பகுதியில்...