தேசிய அடையாள அட்டை பெற வாரந்தோறும் சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு தேசிய அடையாள அட்டை பெறுவதில் சிரமங்களை தவிர்த்திடும் பொருட்டு வாரந்தோறும் புதன்கிழமைகளில்  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிட சிறப்பு மருத்துவர்களை கொண்டு முகாம் நடைபெற உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு முகாம்களில் கலந்துகொள்ள வருபவர்கள் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் 3 மற்றும் ஆதார் அட்டை வண்ண நகல் ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>