கர்ப்பிணி தற்கொலை ஆர்டிஓ விசாரணை

கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி அடுத்த பூவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (30). இவருடைய மனைவி ஸ்வேதா (24). இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். ஸ்வேதா, 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று ஸ்வேதா, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்வேதாவின் தந்தை சுகுமார் (42), ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்வேதாவிடம் அடிக்கடி வரதட்சனை கேட்டு சுகுமார் கொடுமைப் படுத்தியதாகவும் அதனால் மனம் உடைந்து ஸ்வேதா, தற்கொலைக்கு செய்து கொண்டதாக கூறியுள்ளார். திருமணமாகி 6 மாதமே ஆகியிருப்பதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>