மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்களிடம் விசாரணை

பூந்தமல்லி சென்னை வள்ளலார் நகரிலிருந்து திருவேற்காடு நோக்கி நேற்று மாநகரப்பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பயணம் செய்த 2 வாலிபர்கள் படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர். இதைப்பார்த்த நடத்துனர் ஜான்போஸ், படிக்கட்டில் நிற்கவேண்டாம் என்று கூறி சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மதுரவாயல் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது பேருந்திலிருந்து இறங்கிய அந்த 2 வாலிபர்களும் கல்லால் பேருந்து கண்ணாடியை அடித்து உடைத்து நொறுக்கிவிட்டு ஓடினர். இதுகுறித்து நடத்துனர் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பேருந்து கண்ணாடியை உடைத்த 18 வயதுடைய 2 கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>