×

பள்ளிகளை திறக்காததால் கூலி வேலைக்கு செல்லும் கிராமப்புற மாணவர்கள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

செங்கல்பட்டு: இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுந்தர், செயலாளார் தமிழ்பாரதி ஆகியோர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் கலெக்டர்களிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வு அறிவித்த பிறகும்கூட  இன்று வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.  இதனால் கிராமப்புற மாணவர்கள் தங்கள் குடும்பத்தின் நெருக்கடி காரணமாக வேறு வழியின்றி பல்வேறு கூலி  வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  

இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விகுறியாகி வருகிறது. எனவே, பள்ளி, கல்லூரிகளை உடனடியாக திறந்து மாணவர்கள் பாதுகாப்புடன்  கல்வி பயில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 2017-2019 வரையிலான கல்வி ஆண்டுகளில் படித்து முடித்த மாண வர்களுக்கு தமிழக அரசு அறிவித்த இலவச மடிக்கணினி இன்றுவரை வழங்கப்படாமல் உள்ளது. மடிக்கணினியை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். செங்கல்பட்டில் இயங்கி வரும்  ஐடிஐ தொழிற்கூடம் திறந்து பல மாதங்களாகியும் மாணவர்களுக்கு இன்றுவரை இலவச பஸ் பாஸ் வழங்க வில்லை. மாணவர்களின்  நலனை கருத்தில் கொண்டு இலவச பேருந்து அட்டை வழங்கவேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : schools , Schools, rural students
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்