சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மதுரை எஸ்.பி அலுவலக பணியாளரிடம் விசாரணை..!

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன் நகரை சேர்ந்த பாலாஜி (40). இவர் மதுரை எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி மதுரை அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார். கொரோனா காரணமாக காரைக்குடி பொன் நகரில் உள்ள சொந்த வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் பாலாஜியின் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உறவினர்கள் என்பதால் அங்கு அடிக்கடி சென்றுள்ளார்.

இதனையடுத்து, அங்குள்ள 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் உன் அம்மா தற்கொலை செய்து கொள்வார் என மிரட்டி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பாலாஜி சிறுமியின் வீட்டுக்கு வந்த போது அவர் பயந்து ஓடி உள்ளார்.

மேலும், இதில் சந்தேகமடைந்து அவர் தாய் சிறுமியிடம் விசார்த்த போது இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் பாலாஜியிடம் டி எஸ்.பி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>