மான் வேட்டை வழக்கில் பிப். 6ல் ஆஜராக சல்மான் கானுக்கு உத்தரவு

ஜோத்பூர்மான் வேட்டை வழக்கில் வரும் பிப். 6ம் தேதி நீதிமன்றத்தில் நடிகர் சல்மான்கான் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சினிமா படப்பிடிப்பின் போது மான் வேட்டையாடியது தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிப்ரவரி 6ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு

ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட சல்மான் கான் ஜோத்புர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

இவ்வழக்கில் நேரில் ஆஜராவதற்கு சல்மான் கான் சார்பில் விலக்கு கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஜோத்புர் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு சல்மான் கான் ஆஜராகவில்லை. அதனால், வரும் பிப்ரவரி 6ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>