ஊட்டியில் மழை குறைந்ததால் ஏரியில் மிதி படகு சவாரி மீண்டும் துவக்கம்

ஊட்டி: ஊட்டி ஏரியில் மிதி படகு சவாரி நேற்று முதல் மீண்டும் துவங்கியது. மழை காரணமாக பாதுகாப்பு கருதி கடந்த 13ம் தேதி முதல் ஊட்டி ஏரியில் மிதி படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படவில்லை. மோட்டார் படகில் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு நேற்று பகலில் வெயில் வாட்டிய நிலையில், நேற்று முதல் சுற்றுலா பயணிகள் மிதி படகில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்று கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் ஊட்டி ஏரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மிதி படகுகளில் ஏரியில் வலம் வந்தனர்.

Related Stories:

>