நீதித்துறையை கொச்சைப்படுத்தியதாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது வக்கீல்கள் போலீசில் புகார்

நெல்லை: நீதித்துறை மாண்பை கொச்சைப்படுத்தி பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேரன்மகாதேவி வக்கீல்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

சென்னையில் நடந்த ஒரு வார பத்திரிகை ஆண்டு விழாவில் பேசிய அதன் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி, நீதிபதிகள் குறித்து சர்க்கைகுரிய வகையில் பேசியிருந்தார். இது இந்திய

நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும், கண்டனத்திற்குரிய பேச்சு என்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வழக்கறிஞர்கள் சங்கத்தின் மூத்த வக்கீல் ராஜகோபால் தலைமையில் வக்கீல்கள் நேற்று சேரன்மகாதேவி போலீசில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளனர். அதில், ‘‘நீதித்துறையின் மாண்பை கொச்சைப்படுத்தி பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.போலீசார் புகாரை பதிவு செய்து வக்கீல்களுக்கு ரசீது கொடுத்துள்ளனர்.

Related Stories: