×

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 1,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி..: பிரதமர் மோடி அறிவிப்பு..!

டெல்லி : பிராரம்ப் ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சிமாநாட்டில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்டார்ட்அப்களுடன் கலந்துரையாடினார். பிம்ஸ்டெக் நாடுகளின் அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் திரு பிரகாஷ் ஜவடேகர், திரு பியூஷ் கோயல், திரு சோம் பிரகாஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்றைய வர்த்தகத்தின் பண்பு நலன்கள் அமைப்பை ஸ்டார்ட்அப்கள் மாற்றி வருவதாகக் கூறினார். அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களில் 44 சதவீதம் இயக்குநர்கள் பெண்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த நிறுவனங்களில் பணி புரியும் பெண்களின் எண்ணிக்கையும் மிக அதிகம் என்று தெரிவித்தார். இதுபோல, 45 சதவீதம் ஸ்டார்ட்அப்கள் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் அமைந்துள்ளன. உள்ளூர் உற்பத்தி பொருட்களின் வணிக முத்திரைகளாக அவை திகழ்கின்றன. உள்ளூர் வாய்ப்புகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலமும் ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவும், ஊக்குவிப்பும் அளித்து வருகின்றன. ஸ்டார்ட்அப் இந்தியா இயக்கத்தின் அங்கமாக நாட்டின் 80 சதவீத மாவட்டங்கள் தற்போது உள்ளன. அனைத்து விதமான பின்னணிகளையும் கொண்ட இளைஞர்கள் இந்த சூழலில் உள்ள அவர்களது ஆற்றல்களை  உணர முடிந்துள்ளது.

இந்தப் பணியை ஏன் நீங்கள் செய்யக்கூடாது? ஏன் ஒரு ஸ்டார்ட்அப்? என்பதிலிருந்து பணி என்பது சரியானால், உங்களது சொந்த ஸ்டார்ட்அப்பை ஏன் உருவாக்கக்கூடாது! என மாறியுள்ளதே இதன் விளைவு என்று பிரதமர் கூறினார். யுனிகார்ன் கிளப்பில் 2014-ம் ஆண்டு வெறும் 4 இந்திய ஸ்டார்ட்அப்கள் மட்டும் இருந்தன. ஆனால், இன்று 30-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன, அவை ஒரு பில்லியன் என்னும் வர்த்தக அளவைத் தாண்டியுள்ளன என்று திரு மோடி கூறினார்.

கொரோனா காலத்திலும், 2020-ல் 11 ஸ்டார்ட்அப்கள் யுனிகார்ன் கிளப்பில் சேர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த நெருக்கடியான காலத்தில் தற்சார்பு இந்தியா இயக்கத்தில் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். கிருமிநாசினிகள், பிபிஇ உபகரணங்கள், அது தொடர்பான விநியோக சங்கிலித்தொடர் கிடைப்பதை உறுதி செய்வதில் ஸ்டார்ட்அப்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. வீட்டு வாயிலில் மளிகை பொருட்கள், மருந்துகள் விநியோகம் முன்களப் பணியாளர்களை அழைத்து வரும் போக்குவரத்து வசதி போன்ற உள்ளூர் தேவைகளை சமாளிக்கும் வகையிலும், ஆன்லைன் படிப்பு பொருட்களை வழங்குவதிலும்  அவர்கள் உன்னத பங்காற்றியுள்ளனர். துன்பத்திலும் வாய்ப்புகளை கண்டுபிடிப்பதில் ஸ்டார்ட்அப்களின் ஆர்வத்தைப் பிரதமர் பாராட்டினார்.

இன்றைய  பிராரம்பில் பல முக்கிய அம்சங்களை  திரு மோடி குறிப்பிட்டார். இன்று, முதலாவது பிம்ஸ்டெக் நாட்டின் ஸ்டார்ட்அப் மாநாட்டுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று, ஸ்டார்ட்அப் இந்தியா இயக்கம் தனது வெற்றிகரமான ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தியா மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இன்று தொடங்கியுள்ளது. இந்த நாள், நமது இளைஞர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர் ஆகியோரின் திறமைகளுக்கும், நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கும் சான்றாகும் என்று அவர் கூறினார்.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேப்பாளம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து போன்ற பிம்ஸ்டெக் நாடுகளில் ஸ்டார்ட்அப் வெளியில் துடிப்புமிகு ஆற்றல் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த நூற்றாண்டு, டிஜிடல் புரட்சி மற்றும் புதிய யுகத்தின் படைப்புகளுக்கான நூற்றாண்டு என்று பிரதமர் குறிப்பிட்டார். இது ஆசியாவின் நூற்றாண்டும் ஆகும். எனவே, நம் காலத்தின் தேவைக்கு ஏற்ற எதிர்கால தொழில்நுட்பமும், தொழில் முனைவோரும் இந்தப் பிராந்தியத்திலிருந்து வரவேண்டும். இதற்கு, ஒத்துழைப்பில் உறுதி மிக்க ஆசிய நாடுகள் பொறுப்பேற்று ஒன்று சேர வேண்டும். பிம்ஸ்டெக் நாடுகள் மனித குலத்தின் ஐந்தில் ஒரு பகுதிக்காக பாடுபட்டு வருவதால், இந்தப் பொறுப்பு நம்முடையதாக இருப்பது இயல்புதான் என்றார் பிரதமர்.

‘ஸ்டார்ட்அப் இந்தியாவின் பரிணாமம்’ என்னும் தலைப்பிலான கையேடு ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார். ஸ்டார்ட் அப் வெளியில் இந்தியாவின் 5 ஆண்டு கால பயணத்தின் அனுபவங்களை இது விவரிக்கிறது. உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழலை 41 ஆயிரத்துக்கும் கூடுதலான ஸ்டார்ட் அப்களுடன் உருவாக்குவதற்கான ஆரம்பகால சவால்களை அவர் நினைவு கூர்ந்தார். இந்த ஸ்டார்ட் அப்களில், 5700 ஐடி துறையிலும், 3600 சுகாதாரத் துறையிலும், சுமார் 1700  வேளாண் துறையிலும் இயங்கி வருகின்றன. மக்கள் தங்கள் உணவுப்பழக்கங்களில் மேலும், மேலும் விழிப்புணர்வுடன் இருப்பதால், உணவு, வேளாண் துறையில் புதிய வாய்ப்புகள் உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒரு லட்சம் கோடி ரூபாய் மூலதன அடிப்படையுடன் வேளாண் கட்டமைப்பு நிதி உருவாக்கபட்டுள்ளதால், இந்தத் துறைகளின் வளர்ச்சியில் இந்தியா சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இந்தப் புதிய வழிகள் மூலமாக, ஸ்டார்ட் அப்கள், விவசாயிகளுடன் கூட்டாக செயல்பட்டு வருகின்றனர். பண்ணைகளிலிருந்து தரமான பொருட்களை எளிதாகக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

ஸ்டார்ட் அப் உலகின் மிகப் பெரிய தனித்துவ விற்பனை முன்மொழிவு அதன் இடையூறு மற்றும் பல்வகைப்படுத்தில் அடங்கியுள்ளது என பிரதமர் கூறினார். அவர்கள் புதிய அணுகுமுறைகள், புதிய தொழில்நுட்பம், புதிய வழிமுறைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இடையூறு ஏற்படுகிறது; புரட்சியை ஏற்படுத்தும்  பல்வேறு வகையான சிந்தனைகளுடனும், பல்வேறு துறைகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உத்திகளுடனும் அவர்கள் வருவதால், பல்வகைப்படுத்துதல் ஏற்படுகிறது. இந்த சூழலின் மிகப் பெரிய அம்சம், நடைமுறைவாதத்தை விட ஆர்வம் அதிக அளவில் வழி நடத்துவதுதான். செய்ய முடியும் என்ற இந்த எழுச்சி, இன்று இந்தியா செயல்படும் விதத்திற்கு சான்றாகும் என திரு மோடி தெரிவித்தார்.

பிம் யுபிஐ முறை, பணப்பட்டுவாடாவில் புரட்சி ஏற்படுத்தி இருப்பதை பிரதமர் எடுத்துக்காட்டினார். 2020 டிசம்பரில் மட்டும், இந்தியாவில் யுபிஐ மூலம் 4 லட்சம் கோடி அளவுக்கு பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதேபோல, சூரிய சக்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஏழைகள், விவசாயிகள், மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் வழங்கும் நடைமுறையால் அவர்கள் பயனடைந்தனர். இதனால் அவர்களது கஷ்டங்களில் இருந்து நிம்மதி கிடைத்ததுடன்,  முறைகேடாகச் சென்று கொண்டிருந்த 1.75 லட்சம் கோடி தடுத்து நிறுத்தி  தவிர்க்கப்பட்டுள்ளது என்று திரு மோடி தெரிவித்தார்.

ஜிஇஎம் என்னும் அரசு கொள்முதல் தளத்தின் மூலம், ஸ்டார்ட்அப்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்த தளத்தில் 8 ஆயிரம் ஸ்டார்ட்அப்கள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம், அவர்கள் 2300 கோடிக்கு வர்த்தகம் புரிந்துள்ளனர். வருங்காலங்களில் ஜிஇஎம்-இமில் ஸ்டார்ட்அப்களின் இருப்பு அதிகரிக்கும் என்று அவர் கூறினார். இது, உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் வேலை வாய்ப்புகள், ஸ்டார்ட்அப் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்த முதலீட்டுக்கு ஊக்கமளிக்கும்.

ஆயிரம் கோடி ரூபாயுடன் ஸ்டார்ட்அப் இந்தியா மூலதன நிதி தொடங்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார். இதனால், ஸ்டார்ட்அப்களுக்கு முதலீட்டு தொகை பற்றாக்குறை இராது. இது புதிய ஸ்டார்ட்அப்கள் தொடங்குவதற்கும், வளருவதற்கும் பெரிதும் உதவும். ஸ்டார்ட்அப்கள் மூலதனப் பங்குகளை உருவாக்க நிதியின் நிதி  திட்டம் ஏற்கனவே உதவி வருகிறது.  உத்தரவாதங்கள் மூலம் முதலீடுகளைப் பெற அரசும் உதவும்.  ‘இளைஞர்களின் இளைஞர்களால், இளைஞர்களுக்கான’ என்னும் தாரக மந்திரத்தின் அடிப்படையிலான  ஸ்டார்ட்அப் சூழலுக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இலக்குகளை நாம் நிர்ணயிக்க வேண்டும். இந்த இலக்குகள், நமது ஸ்டார்ட்அப்கள், நமது யுனிகார்ன்கள் உலகப் பெரும் நிறுவனங்களாக உருவாகி, வருங்கால தொழில்நுட்பங்களில் முன்னணி வகிக்க வேண்டும் என்று திரு மோடி நிறைவாக குறிப்பிட்டார்.

Tags : start-up companies , Startup, Prime Minister Modi
× RELATED 9 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஸ்டார்ட் அப்...