அகமதாபாத் மெட்ரோ ரயிலின் 2ம் கட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை பூமி பூஜை செய்கிறார்!!

டெல்லி : அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் ஆகியவற்றுக்கான பூமி பூஜையை 18 ஜனவரியன்று காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொள்கிறார்.குஜராத் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘துரித மக்கள் போக்குவரத்து அமைப்பை’ இந்நகரங்களுக்கு இந்த மெட்ரோ திட்டங்கள் வழங்கும்.

அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் குறித்து:

28.25 கி.மீ நீளத்துக்கு இரண்டு வழித்தடங்களுடன் அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் அமையும். மொட்டேரா விளையாட்டு அரங்கில் இருந்து மகாத்மா மந்திர் வரை 22.8 கி.மீ நீளத்துக்கு முதல் வழித்தடம் அமைக்கப்படும். ஜி என் எல் யூ-வில் இருந்து கிஃப்ட் சிட்டி வரை 5.4 கி.மீ நீளத்துக்கு இரண்டாம் வழித்தடம் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ 5,384 கோடி ஆகும்

சூரத் மெட்ரோ ரயில் குறித்து

40.35 கி.மீ நீளத்துக்கு இரண்டு வழித்தடங்களுடன் சூரத் மெட்ரோ ரயில் திட்டம் அமையும். சர்தானாவில் இருந்து டிரீம் சிட்டி வரை 21.61 கி.மீ நீளத்துக்கு முதல் வழித்தடம் அமைக்கப்படும். பேசனில் இருந்து சரோலி வரை 18.74 கி.மீ நீளத்துக்கு இரண்டாம் வழித்தடம் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ 12,020 கோடி ஆகும்

Related Stories:

>