கோயில் பூசாரி தற்கொலை

பல்லாவரம்:   பல்லாவரம், மலகானந்தபுரம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (30). இவர் அப்பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோயில் பூசாரி.  இவருக்கு, பல இடங்களில் பெண் தேடியும் பொருத்தமான வரன் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெங்கடேஷ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் படுக்கையறையில் வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பல்லாவரம் போலீசார் விரைந்து வந்து  வெங்கடேஷ் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>