×

திருவூடல் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் இடையே ஏற்படும் ஊடலையும், கூடலையும் விளக்கும் வகையில் திருமஞ்சன கோபுர வீதியில் திருவூடல் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.  தைத்தொடர்ந்து, நேற்று காலை அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் கிரிவலப்பாதையில் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தீப மலையை அண்ணாமலையாரே கிரிவலம் செல்லும் நிகழ்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. அதன்படி, கார்த்திகை தீப திருவிழா முடிந்த மறுதினமும், திருவூடல் திருவிழாவிலும் அண்ணாமலையார் கிரிவலம் வருவது தனிச்சிறப்பாகும். அதைத்தொடர்ந்து, சுவாமிக்கும் அம்மனுக்கும் இடையே ஏற்பட்ட ஊடல் தீர்ந்ததற்கான மறுவூடல் நிகழ்ச்சி அண்ணாமலையார் கோயிலில் நேற்று மாலை நடந்தது.

Tags : festival ,Annamalaiyar ,Thiruvodal ,devotees ,Kiriwalam , On the eve of the Thiruvodal festival, Annamalaiyar went to Kiriwalam and blessed the devotees
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!