ராணுவ தினம் சென்னை போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி

சென்னை: ராணுவ தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக, ஜெனரல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்ற ஜனவரி 15ம் தேதி ஆண்டுதோறும் இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி 15ம் தேதி இந்திய ராணுவ தினம் கொண்டாடப்பட்டது. சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் மானிக் குமார் தாஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பல உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>